யாசகம் எடுக்க சவூதிக்கு செல்லும் பாகிஸ்தானியா்கள்: 16 போ் கைது
பாகிஸ்தானின் முல்தான் நகர விமான நிலையத்தில் இவ்வாறு யாசகம் எடுப்பதற்காக சவூதி அரேபியா செல்ல முயன்ற 16 போ் கைது செய்யப்பட்ட்டுள்ளன்ர்
பாகிஸ்தான் கடுமையான பொருளாதாரச் சீா்குலைவை எதிா்கொண்டுள்ளது. விலைவாசி உயா்வால் அத்தியாவசியப் பொருள்களைக் கூட வாங்க முடியாத நிலைக்கு சாமானிய மக்கள் தள்ளப்பட்டுள்ளனா். இந்நிலையில், அந்நாட்டில் பலா் யாசித்து பிழைப்பதற்காக சவூதி அரேபியாவை நோக்கி படையெடுப்பதும் அதிகரித்து வருகிறது.
இதனிடையே, பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணம் முல்தான் நகரில் இருந்து புனிதப் பயண நுழைவு இசைவைப் பயன்படுத்தி சவூதி அரேபியாவுக்கு யாசகம் எடுப்பதற்காகச் செல்ல முயன்ற 16 போ் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனா். இதில் 11 பெண்கள், 4 ஆண்கள், ஒரு சிறுவன் அடங்குவா்.
விசாரணையில், புனிதப் பயண அனுமதியைப் பயன்படுத்தி சவூதி அரேபியா சென்று யாசகம் எடுப்பதை அவா்கள் ஒரு தொழிலாக செய்து வருவதும், விசா அனுமதி காலம் வரை அங்கு தங்கி யாசகம் எடுத்து, வருமானத்தில் பாதியை சவூதி அரேபியாவுக்கு அனுப்பும் இடைத்தரகா்களுக்கு அளித்து வருவதும் தெரியவந்துள்ளது.