லாகூர் கற்பழிப்பு வழக்கில் பொய்யான செய்திகளை பரப்பிய 16 பேர் கைது
ஒரு வாரத்திற்கு முன்பு பஞ்சாப் மாகாணம் முழுவதும் வன்முறைப் போராட்டங்களுக்கு வழிவகுத்த ஒரு பெண் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் போலிக் கதைகளைப் பரப்பியதாகக் குற்றம் சாட்டி பல வ்லோக்கர்கள்(காணொளி பதிவாளர்கள்) மற்றும் டிக்டோக்கர்களை சட்ட அமலாக்க முகவர் கைது செய்துள்ளனர்.
மேலும் நாசவேலை மற்றும் வன்முறையில் ஈடுபட்ட 40 மாணவர்களையும் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர் என்று பஞ்சாப் மூத்த காவல்துறை அதிகாரி இம்ரான் கிஷ்வர் தெரிவித்துள்ளார்.
“இந்த சம்பவம் குறித்து போலியான செய்திகளை பரப்பும் 138 சமூக ஊடக கணக்குகளையும் நாங்கள் முடக்கியுள்ளோம்,” என்று அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
சைபர் கிரைம் பிரிவின் தொழில்நுட்ப அறிக்கைகள் 38 மூத்த ஊடகவியலாளர்கள், வழக்கறிஞர்கள், வ்லோக்கர்கள் மற்றும் டிக்டோக்கர்களின் சமூக ஊடக கணக்குகளை அடையாளம் கண்டுள்ளன, அவர்கள் போலி பிரச்சாரத்தின் செய்திகளைப் பகிர்வதில் ஈடுபட்டுள்ளனர், பொது மக்களை அரசாங்கத்தை எதிர்த்து ஈடுபட தூண்டினர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.