பிரித்தானிய தேர்தல்களில் 16 , 17 வயதுடையவர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை – நாடாளுமன்றில் விவாதம்
பிரித்தானிய தேர்தல்களில் 16 மற்றும் 17 வயதுடையவர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்குவது தொடர்பான சட்ட முன்மொழிவு குறித்து நாடாளுமன்றில் விவாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதேவேளை, (Hannah Spencer) ஹன்னா ஸ்பென்சர் கோர்டன் மற்றும் டென்டன் தொகுதிக்கான புதிய எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டதை பல இளைஞர்கள் உற்சாகமாக வரவேற்றுள்ளனர்.
சமூக வலைதளங்களில் மிகவும் செயலில் உள்ள அவர், இன்ஸ்டாகிராமில் 300,000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களை கொண்டுள்ளார். அவரது ஏற்புரை சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டுள்ளது.
இளைஞர்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என யூடியூப்பில் அரசியல் உள்ளடக்கங்களை வெளியிடும் PoliticsJOE நிறுவனத்தின் தயாரிப்பாளர் கூறியுள்ளார்.





