கவுதமாலாவில் 150 முறை நிலநடுக்கம் : நால்வர் பலி!

மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அங்கு 3 முதல் 5.7 வரை ரிக்டர் அளவுகளில் 150-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் மற்றும் நில அதிர்வுகள் ஏற்பட்டன.
தொடர் நில நடுக்கங்களால் பீதியடைந்த மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். அவர்கள் இரவு சாலைகளில் படுத்து தூங்கினர்.
நிலநடுக்கத்தால் பல வீடுகள் சேதமடைந்தன. அத்துடன் நிலநடுக்கத்தில் சிக்கி சிறுவன் உள்பட 4 பேர் பலியாகியுள்ளனர்.
இதில் எஸ்குவிண்ட்லா பகுதியில் லாரியில் சென்றபோது, பாறைகள் சரிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.
(Visited 1 times, 1 visits today)