ஆஸ்திரேலிய குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ள 15,000 நியூசிலாந்து நாட்டவர்கள்
நியூசிலாந்து நாட்டினருக்கு குடியுரிமை வழங்கும் விரைவுத் திட்டத்தின் கீழ் 06 வாரங்களுக்குள் 15,000க்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த புதிய முறை ஜூலை 1 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு அதன் படி நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 375 பேர் விண்ணப்பங்களை அனுப்பியதாக கூறப்படுகிறது.
இந்த விண்ணப்பங்களில் சுமார் 35 சதவீதம் குயின்ஸ்லாந்திலிருந்தும், 30 சதவீதம் விக்டோரியாவிலிருந்தும், 20 சதவீதம் நியூ சவுத் வேல்ஸிலிருந்தும் வந்தன.
இவர்களில் ஏறக்குறைய 500 பேர் ஏற்கனவே குடியுரிமை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் மற்றும் எதிர்காலத்தில் ஒரு விழாவில் குடியுரிமை வழங்கப்படுவார்கள்.
விசேட வீசா பிரிவின் கீழ் அவுஸ்திரேலியாவில் குறைந்தபட்சம் 04 வருடங்கள் தங்கியிருக்கும் நியூசிலாந்து நாட்டவர்களுக்கு நிரந்தர வதிவிடமின்றி குடியுரிமை வழங்கப்படுகிறது.
விசேட வீசா பிரிவின் கீழ் தற்போது அவுஸ்திரேலியாவில் உள்ள சுமார் 350,000 நியூசிலாந்து நாட்டவர்கள் நிரந்தர வதிவிட உரிமை பெறாமல் நேரடியாக குடியுரிமை பெறும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.