பிரான்ஸில் வீடொன்றில் தங்கியிருந்த 150 அகதிகள் – அதிகாரிகள் எடுத்த அதிரடி நடவடிக்கை

பிரான்ஸில் வீடொன்றில் தங்கியிருந்த 150 இற்கும் மேற்பட்ட அகதிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
Thiais (Val-de-Marne) நகரில் உள்ள கைவிடப்பட்ட வீடொன்றில் தங்கியிருந்தவர்களே இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த அகதிகளே அங்கு கடந்த 2021 ஒக்டோபர் மாதம் முதல் தங்கியிருந்தனர்.
இந்த நிலையில், அவர்கள் இல் து பிரான்சின் வெவேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கடந்த 4 நாட்களுக்கு முப்பரன் சம்பவ இடத்துக்கு வருகை தந்த பொலிஸார் மற்றும் அதிகாரிகள் சிலர், அகதிகளை அங்கிருந்து வெளியேற்றி பேருந்துகளில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
இதுபோன்ற வெளியேற்றங்களில் இடம்பெறும் வன்முறைச் சம்பவங்கள் போன்று இம்முறை இடம்பெறவில்லை.
மிகவும் அமைதியாக இந்த வெளியேற்றம் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 8 times, 1 visits today)