அதீத வெப்பம் காரணமாக 147 அமெரிக்கர்கள் பலி!

அதிக வெப்பம் காரணமாக, அமெரிக்காவின் பல மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 147 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எதிர்பார்த்ததை விட அதிக வெப்பத்தினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வானிலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதிக வெப்பத்தினால் அமெரிக்காவின் 03 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி அரிசோனா, நெவாடா மற்றும் டெக்சாஸ் மாநிலங்கள்.
அரிசோனா மாநிலத்தில் அதிக வெப்பம் காரணமாக 103 பேர் உயிரிழந்துள்ளனர். நெவாடாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 26 என்றும், டெக்சாஸ் மாகாணத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
(Visited 16 times, 1 visits today)