காசாவில் அடுத்த 48 மணிநேரத்தில் 14000 குழந்தைகள் உயிரிழக்க வாய்ப்பு – ஐ.நா தகவல்!

காசாவில் மனிதாபிமான நெருக்கடிகள் அதிகரித்து வருகின்ற நிலையில் அடுத்த 48 மணிநேரத்தில் 14000 குழந்தைகள் உயிரிழக்கும் வாய்ப்புள்ளதாக ஐ.நா கவலை வெளியிட்டுள்ளது.
கடந்த 11 வாரங்களாக காசாவுக்குள் செல்லும் அனைத்து உதவிப்பொருட்களையும் இஸ்ரேல் நிறுத்திவைத்தது. இந்நிலையில் நேற்று கனடா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து போன்ற நட்பு நாடுகளின் அழுத்தத்தின் கீழ், குறைந்த அளவிலான உதவிப்பொருட்களை காசாவுக்குள் கொண்டு செல்ல இஸ்ரேல் அனுமதித்தது.
இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஐ.நா. மனிதாபிமானத் தலைவர் டாம் பிளெட்சர், ஐந்து லாரிகள் நிறைய மனிதாபிமான உதவிகள் மட்டுமே காசாவிற்குள் நுழைந்தன, அதில் குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களும் அடங்கும்.
ஊட்டச்சத்து குறைபாடுள்ள தாய்மார்களுக்கும், தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத அவநம்பிக்கையான சூழ்நிலைகளில் உள்ளவர்களுக்கும் உணவைக் கொண்டு செல்வதில் நாங்கள் அனைத்து வகையான சவால்களையும் எதிர்கொள்கிறோம்” என்று தெரிவித்தார்.