ஸ்வீடனில் ஒரு வாரத்திற்கு மூடப்படும் 140 ஆண்டுகள் பழைமையான பூங்கா!
ஸ்வீடன் தலைநகரில் உள்ள க்ரோனா லண்ட் பொழுதுபோக்கு பூங்காவில் ரோலர் கோஸ்டர் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 09 பேர் காயமடைந்துள்ளதாக பூங்காவின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
குறித்த விபத்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பதிவாகியுள்ளது. இந்நிலையில், இன்றைய தினம் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
விபத்து நடந்த சிறிது நேரத்திலேயே ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் வருகை தந்ததுடன், மீட்பு பணிகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டன.
மேலும் இது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அறிய முடிகிறது.
குறித்த விபத்தினால் 140 ஆண்டுகள் பழமையான பூங்கா குறைந்தது ஒரு வாரமாவது மூடப்பட்டிருக்கும் எனவும் இது பொலிஸாரின் விசாரணைக்கு உதவியாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 9 times, 1 visits today)