மியன்மாரில் புதிதாக பதிவான 14 நில அதிர்வுகள் : பலி எண்ணிக்கை ஆயிரத்தை எட்டியது!

மியான்மரை நேற்று (28) தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1000 ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 1,670 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. நாட்டின் இராணுவ ஆட்சி இதை உறுதிப்படுத்தியுள்ளது.
மியான்மரின் பண்டைய தலைநகரான மண்டலேயை மையமாகக் கொண்டு, உள்ளூர் நேரப்படி இரவு 10:00 மணிக்கு 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியது.
இருப்பினும், நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களுக்குப் பிறகு, ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவான பின்னதிர்வு ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கங்களின் வலிமை தாய்லாந்தின் அண்டை நகரமான பாங்காக்கிலும் உணரப்பட்டது. இதன் விளைவாக, மியான்மர் மற்றும் பாங்காக்கில் பல கட்டிடங்கள் சேதமடைந்தன.
இதேவேளை நேற்று பிற்பகல் ஏற்பட்ட முக்கிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இன்று காலை நிலவரப்படி மியான்மரில் 14 பின்னதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.