13 வயது சிறுவன் துஷ்பிரயோகம் : பிக்கு கைது!

13 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த பிக்கு ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் போகஸ்வெவ பிரதேசத்தில் உள்ள ரஜமஹா விகாரை ஒன்றில் பணிபுரிந்து வருபவர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சந்தேகநபரான சிவரதாரியர் வசிக்கும் ஆலயத்தில் ஆண் குழந்தை ஒன்று பாரிய பாலியல் துஷ்பிரயோகத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு தகவல் கிடைத்துள்ளது.
குறித்த தகவல் தொடர்பில் விசாரணை நடத்துமாறு சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை எத்துவெவ பொலிஸாருக்கு அறிவித்துள்ளநிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட 13 வயது சிறுவன் மருத்துவ பரிசோதனைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
(Visited 10 times, 1 visits today)