ஐரோப்பா செய்தி

ஸ்பெயினில் இரவு விடுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் 13 பேர் பலி

ஸ்பெயினின் முர்சியா நகரில் இரவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தீ விபத்தில் குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் நம்புகின்றனர்.

மேலும் நான்கு பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

22-25 வயதுடைய இரண்டு யுவதிகளும் 41 மற்றும் 45 வயதுடைய இரண்டு ஆண்களும் காயமடைந்துள்ளனர்.

தீயினால் ஏற்பட்ட புகையை சுவாசித்ததால் காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முர்சியா எமர்ஜென்சி சர்வீசஸ் இணையதளம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் இன்னும் நடந்து வருகின்றன, ஆனால் தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் அந்நாட்டு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!