பெரு நாட்டின் தங்கச் சுரங்கத்தில் 13 உடல்கள் கண்டெடுப்பு
பெரு நாட்டின் தலைநகர் லிமாவின் வடக்கே உள்ள படாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு தங்கச் சுரங்கத்தில் 13 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சுரங்கத்தைக் கட்டுப்பாட்டில் எடுத்த ஒரு குற்றக் கும்பலால் இந்தத் தொழிலாளர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதே குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்கள் கடத்தப்பட்டவர்களை ஒரு வாரமாக பணயக்கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளது.
அவர்களது குடும்பத்தினரை அச்சுறுத்தியதாகவும் வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
(Visited 29 times, 1 visits today)





