கிரீஸில் 124 புலம்பெயர்ந்தோர் கைது : சட்டவிரோத வருகையும் 50 % அதிகரிப்பு!
கிரீஸ் அதிகாரிகள் 124 புலம்பெயர்ந்தோரை கிழக்குத் தீவான கார்பதோஸில் கைது செய்துள்ளனர்.
கிழக்கு ஏஜியன் கடலில் உள்ள தீவின் பிரதான துறைமுகத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 58 புலம்பெயர்ந்தோர் கண்டுபிடிக்கப்பட்டதாக கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
மேலும் 66 பேர் வடக்கே மிகவும் தொலைதூரப் பகுதியில் காணப்பட்டனர், அவர்களில் பலர் நிலத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
போலியான அடையாள ஆவணங்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 24 வயதான புலம்பெயர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
கிரீஸ் கடந்த ஆண்டு சட்டவிரோத வருகையில் 50% அதிகரித்ததாக அறிவித்தது. உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள மோதல் போக்கு சட்டவிரோத புலம்பெயர்தலுக்கு முக்கிய காரணியாக அமைந்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
(Visited 2 times, 1 visits today)