16-வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. இன்று நடைபெறும் 10-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகின்றன.
டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி, ஐதராபாத் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அன்மோல் பிரீத் சிங் தாக்குப்பிடித்து 31 ரன்னில் அவுட்டானார்.
மயங்க் அகர்வால் 8 ரன்னிலும், ஹாரி புரூக் 3 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் மார்க்ரம் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். ராகுல் திரிபாதி 35 ரன்னில் வெளியேறினார்.
வாஷிங்டன் சுந்தர் 16 ரன்னில் அவுட்டானார். இறுதியில், ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 121 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதையடுத்து, 122 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி விளையாடுகிறது. கடைசி கட்டத்தில் அப்துல் சமத் 10 பந்தில் 2 சிக்சர் உள்பட 21 ரன்கள் எடுத்தார்.
லக்னோ அணி சார்பில் குருணால் பாண்ட்யா 3 விக்கெட் வீழ்த்தினார். அமித் மிஸ்ரா 2 விக்கெட்டும், ரவி பிஷ்னோய், யாஷ் தாகுர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.