பிலிப்பைன்ஸில் சீரற்ற வானிலையால் 120 பேர் உயிரிழப்பு : டஜன் கணக்கானவர்கள் மாயம்!
வெப்பமண்டல புயல் டிராமியைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸைத் தாக்கிய வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் 120 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் டஜன் கணக்கானவர்கள் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இதுவரை தென்கிழக்கு ஆசிய தீவுக்கூட்டத்தின் மிக மோசமான மற்றும் மிகவும் அழிவுகரமான புயல் இது என்று அரசாங்கத்தின் பேரிடர்-மறுப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
வழக்கத்திற்கு மாறாக பெரிய அளவிலான மழைப்பொழிவால் நகரின் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இரண்டு மாதங்களில் பெய்ய வேண்டிய மழை 24 மணிநேரத்தில் கொட்டி தீர்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.





