மகாராஷ்டிராவில் 12 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை
மகாராஷ்டிராவின்(Maharashtra) லத்தூரில்(Latur) உள்ள நவோதயா(Navodaya) வித்யாலயாவில் 12 வயது சிறுமி ஒருவர் தனது விடுதி அறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
ஆறாம் வகுப்பு மாணவி அறையில் துண்டால் தற்கொலை செய்து கொண்டதாக உதவி காவல் ஆய்வாளர் டிபி சமப்(D.P. Samab) குறிப்பிட்டுள்ளார்.
முந்தைய இரவு விடுதி ஊழியர் ஒருவரால் சிறுமி தாக்கப்பட்டதாகவும் அவரது கைகள் மற்றும் தலையில் காயங்கள் இருந்ததாகவும் சிறுமியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் டிபி சமப் குறிப்பிட்டுள்ளார்.





