பிரித்தானியாவில் 12 வயது சிறுவன் உயிரிழப்பு : 14 வயது சிறுவர் ஒருவர் கைது!
பிரித்தானியாவின் – பர்மிங்காமில் நடந்த ஒரு பயங்கரமான கத்திக்குத்து சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹால் கிரீனில் உள்ள ஸ்க்ரைபர்ஸ் லேன் அருகே 12 வயது சிறுவன் பலத்த காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டார்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், காயங்களின் விளைவாக துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்ததாக வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவம் குறித்து ஏதாவது தெரிந்தவர்கள் முன்வந்து விசாரணைகளுக்கு உதவுமாறு காவல்துறையினர் அழைப்பு விடுத்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





