இமாச்சலப் பிரதேசத்தில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 12 பேர் மரணம்
இமாச்சலப் பிரதேசத்தில்(Himachal Pradesh) தனியார் பேருந்து ஒன்று கிட்டத்தட்ட 400 மீட்டர் ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 12 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 35 பேர் காயமடைந்துள்ளனர்.
சிர்மௌர்(Sirmaur) மாவட்டத்தின் ஹரிபூர்தார்(Haripurdar) பகுதியில், செங்குத்தான சரிவைக் கடக்கும்போது பேருந்து சாலையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து நடந்த நேரத்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்தில் இருந்ததாக நம்பப்படுகிறது. மேலும், இறப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த பயணிகளில் பெரும்பாலோர் உள்ளூர்வாசிகள். அவர்கள் அருகிலுள்ள ஹரிபூர்தாரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.





