செய்தி

12 நாடுகள் வழியே 46,239 கிலோமீட்டர் பயணித்த இன்ஸ்டாகிராம் பிரபலம்

இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர் 274 நாள்களில் 46 ஆயிரத்து 239 கிலோமீட்டர் தூரம் பயணித்து ஜப்பான் வந்தடைந்தார்.

எகிப்தை சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலமும், நீண்ட தூர பயண ஆர்வலருமான ஒமர் நோக் என்பவரே இவ்வாறு பயணித்துள்ளார்.

30 வயதான அவர், சவூதி அரேபியா, ஈரான், ஆப்கனிஸ்தான், தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், கஜகஸ்தான், சீனா என 12 நாடுகள் வழியே ஜப்பான் சென்று சேர்ந்தார்.

பல இடங்களில் வாகனங்களில் லிஃப்ட் கேட்டும், கிர்கிஸ்தான், கஜகஸ்தான் நாடுகளில் குதிரை மற்றும் ஒட்டகங்களில் பயணித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தனது தேவைகளைக் குறைத்துக்கொண்டு ஒருநாளைக்கு 25 டாலர் அளவுக்கே செலவழித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் இரண்டு வாரங்களில் 88 டாலர் மட்டுமே செலவழித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

(Visited 4 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி