பிரித்தானியா நோக்கி சென்ற அகதிகள் – 115 பேர் கடலில் இருந்து மீட்பு

பிரான்ஸில் இருந்து பிரித்தானியா நோக்கி ஆபத்தான பயணம் மேற்கொண்ட 115 அகதிகள் கடலில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
ஏப்ரல் 3 ஆம் திகதி இரவு இந்த மீட்புப்பணி இடம்பெற்றது.
பா-து-கலே பகுதியில் இருந்து இரண்டு படகுகள் அடுத்தடுத்து புறப்பட்டுள்ளன. ஒரு படகில் 66 அகதிகள் பயணித்துள்ளனர்.
மற்றைய படகில் 49 பேர் பயணித்துள்ளனர். அப்படகுகளை தடுத்து நிறுத்திய கடற்படையினர் அகதிகளை பாதுகாப்பாக மீட்டனர்.
(Visited 16 times, 16 visits today)