அமெரிக்காவில் 114 வயதுப் பெண் – ஆரோக்கியத்திற்கான காரணம் வெளியானது
பென்சில்வேனியாவைச் சேர்ந்த 114 வயதுப் பெண் தான் வட அமெரிக்காவில் வாழும் மிக வயதான நபராகக் கருதப்படுகிறார்.
Naomi Whitehead என அழைக்கப்படும் குறித்த பெண் Greenville West Salem என்ற இடத்தில் வசித்து வருகின்றார்.
இதற்குமுன்னர் டெக்சஸைச் சேர்ந்த Elizabeth Francis என்ற பெண் மிக வயதான நபராக இருந்தார். அவர் கடந்த 22ஆம் திகதி காலமானார்.
இதையடுத்து வட அமெரிக்காவின் ஆக வயதான நபராக வைட்ஹெட் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
1910ஆம் ஆண்டு பிறந்தவரான வைட்ஹெட் தமக்குச் சிகரெட் பிடிப்பது, மதுபானம் அருந்துவது போன்ற பழக்கங்கள் இல்லை என குறிப்பிட்டுள்ளார். அவருக்கு 3 மகன்கள் உள்ளனர்.
சமைப்பது, படம் வரைவது, இசையைக் கேட்பது போன்றவை அவருக்குப் பிடித்தமான நடவடிக்கைகள்.
(Visited 33 times, 1 visits today)