ஐரோப்பா

நீண்ட நாள் வாழ்வதற்கான ரகசியம் கூறும் 111 வயதுடைய பிரித்தானியர்

பிரித்தானியாவில் அதிக வயதான மனிதர் என்ற பட்டத்திற்கு சொந்தக்காரரான ஜான் டின்னிஸ்வுட் நீண்ட நாள் வாழ்வதற்கான இரகசியத்தை பகிர்ந்துள்ளார்.

அவர் கடந்த ஒகஸ்ட் 26ம் திகதி தன்னுடைய 111வது பிறந்த நாளை கொண்டாடினார்.

இவர் நீண்ட நாள் வாழ்வதற்கான ரகசியத்தை பகிர்ந்துள்ளார்.

பிரித்தானியாவில் உள்ள லிவர்பூல் என்னும் இடத்தில் 1912ம் ஆண்டு இவர் பிறந்தார். அரசர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமிலியாவிடமிருந்தும் இந்த முதியவருக்கு பிறந்தநாள் வாழ்த்து அட்டைகள் அனுப்பப்பட்டுள்ளன.

தற்போது சவுத் போர்ட்டில் உள்ள ஒரு வீட்டில் இவர் வசித்து வருகிறார்.

111வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது அவர் தன்னுடைய வாழ்க்கை பயணத்தை பற்றி எவ்வாறு உணர்கிறார் என்ற கேள்விக்கு “110 வயது வரை வாழ்வதில் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை.

கடந்த 10 முதல் 20 வருடங்களாகவே எனக்கு எந்த ஒரு வித்தியாசமும் தெரிவதில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரது நீண்ட நாள் வாழ்வதற்குரிய ரகசியத்தை பற்றி கேட்டபோது “அளவாக இருப்பது” என்ற வார்த்தையை அவர் குறிப்பிட்டுள்ளார்.

“வாழ்வில் உள்ள அனைத்து விஷயங்களிலும் அளவாக இருக்க வேண்டும். படிப்பதும், உணவு உட்கொள்வதும், வாக்கிங் செல்வதும் எதுவாக இருந்தாலும் அளவுக்கு மீறி எதையும் செய்யக்கூடாது. அதே சமயத்தில் தேவையான அளவு உடற்பயிற்சியையும் மேற்கொள்ள வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

 

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!