புட்டினிடம் உருக்கமான கோரிக்கை வைத்த 11 வயதுச் சிறுமி – ரஷ்ய ஜனாதிபதி அளித்த உறுதி!
ரஷ்யாவில் 11 வயதுச் சிறுமி வைத்த உருக்கமான கோரிக்கை ஒன்றை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உடனடியாக ஏற்றுக்கொண்டு, அது குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
நடைபெற்ற ஒற்றுமை நாள் (Unity Day) நிகழ்ச்சியின் போது, இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
மொஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் (Red Square) நடந்த இந்நிகழ்வில், புட்டினைச் சந்தித்த அந்தச் சிறுமி, உக்ரைன் போரில் ஆண்டன் பெஸ்யுரா என்ற தனது உறவினருக்குக் கையில் காயம் ஏற்பட்டதாகக் கூறியுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்குச் சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை எனவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
அவரை வேறு ஒரு நல்ல மருத்துவமனையில் சேர்த்துச் சிகிச்சை அளிக்க முடியுமா எனக் கேட்டு அந்தச் சிறுமி புட்டினிடம் கோரியுள்ளார்.
சிறுமி வைத்த கோரிக்கையை ஏற்ற ஜனாதிபதி புடின், அவரது தலையில் முத்தமிட்டு, அந்தக் காயமடைந்த உறவினருக்குச் சரியான சிகிச்சை அளிப்பதாக உடனடியாக உறுதி அளித்தார்.
இச்சம்பவம், போரில் காயமடைந்த வீரர்களின் குடும்பத்தினரின் கவலைகளுக்குப் புட்டினின் தனிப்பட்ட கவனமும், உடனடி நடவடிக்கையும் இருக்கும் என்பதை வெளிப்படுத்துவதாக அமைந்தது.





