அமெரிக்காவை தாக்கிய புயலில் சிக்கி இரண்டு குழந்தைகள் உட்பட 11 பேர் பலி
அமெரிக்காவில் சக்திவாய்ந்த புயல்கள் இரண்டு குழந்தைகள் உட்பட 11 பேரின் உயிரை பறித்துள்ளது.
மேலும் டெக்சாஸ், ஓக்லஹோமா மற்றும் ஆர்கன்சாஸ் முழுவதும் ஒரு பரந்த அழிவை ஏற்படுத்தியுள்ளது.
ஓக்லஹோமா எல்லைக்கு அருகிலுள்ள டெக்சாஸின் குக் கவுண்டியில் ஏழு இறப்புகள் பதிவாகியுள்ளன.
ஓக்லஹோமாவில்,மேயஸ் கவுண்டியில் சூறாவளி தாக்கியதில் இரண்டு பேர் இறந்தனர் என்று அவசரகால நிர்வாகத்தின் மாவட்டத் தலைவர் ஜானி ஜான்சன் தெரிவித்தார்.
வடக்கு ஆர்கன்சாஸில்,ஏற்பட்ட புயல்களில் சிக்கி இரண்டு பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
இறந்தவர்களில் இரண்டு மற்றும் ஐந்து வயதுடைய இரண்டு குழந்தைகள் உள்ளடங்குவதாக ஷெரிப் தெரிவித்தார்.





