11 ஈக்வடார்(Ecuador) ராணுவ வீரர்களுக்கு 34 ஆண்டுகள் சிறைத்தண்டனை
நாடு தழுவிய குற்ற நடவடிக்கையின் ஒரு பகுதியாக, குவாயாகில்(Guayaquil) நகரத்திலிருந்து நான்கு குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்து காணாமல் ஆக்கியதற்காக 11 ராணுவ வீரர்களுக்கு 34 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து ஈக்வடார்(Ecuador) நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
காணாமல் போன குழந்தைகள் மீதான ஒரு வருட விசாரணையை இந்த தண்டனை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.
குழந்தைகள் கடைசியாக டிசம்பர் 8, 2024 அன்று தங்கள் சுற்றுப்புறத்திற்கு அருகிலுள்ள விளையாட்டு மைதானத்தை நோக்கி நடந்து செல்லும்போது காணப்பட்டுள்ளனர்.
ஸ்டீவன் மெடினா(Steven Medina), நெஹேமியாஸ் அர்போலிடா(Nehemiah Arbolita) மற்றும் சகோதரர்கள் இஸ்மாயில்(Ismael) மற்றும் ஜோசுவே அரோயோ(Josue Arroyo) ஆகியோரின் கருகிய உடல்கள் டிசம்பர் 31 அன்று ஒரு கிராமப்புற சதுப்பு நிலத்தில் கண்டெடுக்கப்பட்டன.




