இலங்கை விளையாட்டு

10வது ஆண்டு “சிகரத்தினை நோக்கி” கிரிக்கட் சுற்றுப்போட்டி – மட்டக்களப்பு இந்துகல்லூரி வெற்றி

மட்டக்களப்பு இந்துக்கல்லூரிக்கும் பெரியகல்லாறு மத்திய கல்லூரிக்கும் இடையிலான சிகரத்தை நோக்கிய கிரிக்கட் பிக் மெட்சில் இந்துகல்லூரி அமோக வெற்றிபெற்று இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது.

மட்டக்களப்பின் இரண்டு பிரபல பாடசாலைகள் மோதும் சிகரத்தினை நோக்கி என்னும் தலைப்பிலான கிரிக்கட் சுற்றுப்போட்டி இன்று காலை மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் ஆரம்பமானது.

மட்டக்களப்பு இந்துக்கல்லூரியும் பெரியகல்லாறு மத்திய கல்லூரியும் இந்த சிகரத்தினை நோக்கி என்னும் தொனிப்பொருளிலானர் 10வது ஆண்டாகவும் பிக் மெட்ஸில் விளையாடிவருகின்றது.

இதன் ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம் மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் அதிபர் கே.பகீரதன் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் என்.தனஞ்செயன் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் இன்றைய போட்டியில் கலந்துகொள்ளவுள்ள வீரர்கள் அழைத்துவரப்பட்டு அதிதிகளுக்கு அறிமுகம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.

அதனை தொடர்ந்து இரண்டு பாடசாலை வீரர்களும் விளையாட்டு மைதானத்தில் நாணய சுழற்சியில் ஈடுபட்டதுடன் பெரியகல்லாறு மத்திய கல்லூரி நாணய சுழற்சியில் வெற்றிபெற்று களத்தடுப்பினை தெரிவுசெய்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய மட்டக்களப்பு இந்துக்கல்லூரி அணியினர் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 238 ஓட்டங்களைப்பெற்றுள்ளதுடன் தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய பெரியகல்லாறு மத்திய கல்லூரி அணியினர் 29ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 96ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வியடைந்தனர்.

இந்த சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி அணியினர் வெற்றிபெற்று இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டனர்.

இறுதிப்போட்டியில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாணசபை பேரவையின் செயலாளர் கலாநிதி மு.கோபாலரட்ணம் கலந்துகொண்டார்.;, மட்டக்களப்பு வலய பிரதிக்கல்வி பணிப்பாளர் ஹரிகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது வெற்றி பெற்ற அணிகளுக்கான வெற்றிக்கிண்ணங்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டதுடன் சம்பியன் கிண்ணங்களும் வழங்கப்பட்டன.

(Visited 12 times, 1 visits today)

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்