வெனிசுவெலாவின் அரசியல்வாதி குறித்து தகவல் கொடுப்பவருக்கு 100,000 டொலர் சன்மானம்
வெனிசுவெலாவின் எதிர்க்கட்சி உறுப்பினரைப் பற்றித் தகவல் கொடுப்பவருக்கு 100,000 டொலர் சன்மானம் வழங்கப்படும் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
எட்மோண்டோ கொன்சாலஸ் உருக்கியா என்பவர் குறித்தே தகவல் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அவர் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவைத் (Nicolás Maduro) தேர்தலில் தோற்கடிக்கப் போவதாகக் கூறிவருகிறார்.
பொலிஸார் கொன்சாலஸின் படத்தைச் சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்து “தேடப்படுகிறார்” என்று குறிப்பிட்டது.
கடந்த ஆண்டு ஜுலை 28ஆம் தேதி நடந்த தேர்தலில் மதுரோ வெற்றிப் பெற்றார்.அதன் பிறகு கொன்சாலஸ் ஸ்பெயினுக்குத் தப்பிச் சென்றார். எதிர்வரும் ஜனவரி 10ஆம் திகதி மதுரோ ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார்.
ஆனால் அன்று தாமே பதவியேற்கப் போவதாக 75 வயது கொன்சாலஸ் கூறுகிறார்.
(Visited 1 times, 1 visits today)