அமெரிக்காவில் டிரம்பின் நடவடிக்கையால் வேலை பறிபோகும் நிலையில் 10,000 ஊழியர்கள்

அமெரிக்காவில் 10,000 ஊழியர்களை ஆட்குறைப்புச் செய்வதாக சுகாதார அமைப்புகள் தெரிவித்துள்ளது.
நீக்கப்பட்டதாகக் கடிதம் கிடைத்த சில மணி நேரத்திலேயே சில ஊழியர்கள் அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் நிர்வாகம் மத்திய அரசாங்கத்தின் ஊழியர்கள் எண்ணிக்கையைக் குறைத்து, செலவைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக இந்த ஆட்குறைப்புச் செய்யப்படுவதாகப் பல்வேறு வட்டாரங்கள் கூறுகின்றன.
சுகாதார அமைச்சர் ராபர்ட் F. கென்னடி ஜூனியர் அது பற்றி அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தார்.
தற்போது 82,000 ஊழியர்கள் உள்ளனர். அந்த எண்ணிக்கையை 62,000ஆகக் குறைக்கத் திட்டமிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 1 times, 1 visits today)