இத்தாலியில் குவிந்த 10 ஆயிரம் அகதிகள் – ஜெர்மனியின் முடிவால் கடும் கோபத்தில் மக்கள்
இத்தாலியில் குவிந்த 10 ஆயிரம் அகதிகள் தொடர்பில் ஜெர்மனி நாடு குறித்த அகதிகளை உள்வாங்குவது தொடர்பாக ஜெர்மனிக்குள் எதிர்ப்புக்கள் எழுந்துள்ளது.
கடந்த வாரம் இத்தாலியில் லம்புடசான் என்ற தீவுக்கு மத்திய தரை கடல் பகுதியின் ஊடாக 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆப்பிரிக்க மற்றும் அராபிய அதிகள் வந்து இருந்தார்கள்.
இந்நிலையில் இந்த அகதிகளுடைய விடயத்தில் அந்த நாட்டினுடைய அரசாங்கமானது ஜெர்மனியர்களை குற்றம் சாட்டி இருக்கின்றது.
அதாவது ஜெர்மனியின் சில மீட்பு நிறுவனங்கள் இவ்வாறாக மத்திய தரை கடல் பிரதேசத்தின் ஊடாக வருகின்ற அகதிகளின் உயிராபத்தில் இருக்கும் பொழுது காப்பாற்றுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்து இருக்கின்றது.
ஜெர்மனியின் எவங்களிசன் தேவாலயத்தின் சேர்ந்த அமைப்பானது இவ்வாறான அமைப்புக்கு ஒரு லட்சம் யுரோ வழங்கி இருந்த குற்றச்சாட்டும் எழுந்து இருக்கின்றது.
இந்நிலையில் இதுவரை காலமும் லபிடோஸ் என்ற தீவிற்கு வருகின்ற அகதிகளை விசேடமாக இந்த அகதிகளை உள்வாங்குகின்ற திட்டத்தின் அடிப்படையில் ஜெர்மன் நாடானது அகதிகளை உள்வாங்கி இருந்தது.
இந்நிலையில் இவ்வாறு இம்முறையும் இந்த அகதிகளை ஜெர்மன் நாட்டுக்கு உள்வாங்குவதற்கு எதிராக கடுமையான எதிர்ப்பானது எழுந்துள்ளது.