குடியரசு தினத்தன்று ராஜஸ்தானில் 10,000 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல்
குடியரசு தினத்தன்று ராஜஸ்தானின்(Rajasthan) நாகௌர்(Nagaur) மாவட்டத்தில் உள்ள ஒரு பண்ணையில் இருந்து ஏராளமான வெடிபொருட்களை காவல்துறையின் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், இந்த நடவடிக்கையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், ஹர்சௌர்(Harsaur) கிராமத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு 187 சாக்குகளில் 9,550 கிலோ அம்மோனியம் நைட்ரேட்(ammonium nitrate) ஒரு வயலில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
ஹர்சௌர் கிராமத்தைச் சேர்ந்த சுலேமான் கான்(Suleman Khan) சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டார். அவர் மீது மூன்று குற்ற வழக்குகள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர் சட்டப்பூர்வ மற்றும் சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு வெடிபொருட்களை வழங்குவதாக தெரியவந்துள்ளது.





