அமெரிக்க வானை ஒளிரச் செய்த 1000 ட்ரோன்கள் – கண்டு ரசித்த பார்வையாளர்கள்
அமெரிக்காவின் மன்ஹாட்டன் பகுதியில் உள்ள சென்ட்ரல் பூங்கா ஏரிக்கு அருகே இரவு வானை ஒளிரச்செய்யும் வகையில் கண்கவர் ட்ரோன் நிகழ்ச்சி நடைபெற்றது.
ட்ரிஃப்ட் எனும் டச்சு நிறுவனத்தால் “பிரான்சைஸ் ஃப்ரீடம்” எனும் பெயரில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் 1000 ட்ரோன்கள் ஒரே நேரத்தில் வானில் பறக்க விடப்பட்டன.
ட்ரோன்கள் மூலம் வானில் தோன்றிய உருவங்களை பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.
இரவு நேர பறவைகள் மற்றும் அவற்றின் வழித்தடங்களுக்கு இந்த நிகழ்ச்சியினால் எந்த தடையும் ஏற்படாது என உறுதி செய்யப்பட்டதாகவும் டிரிஃப்ட் அமைப்பினர் கூறியுள்ளனர்.
(Visited 3 times, 1 visits today)