புகையிரத திணைக்களத்திற்கு 100 புதிய நிலைய அதிபர்கள்
இலங்கை புகையிரத திணைக்களத்தின் புகையிரத நிலைய அதிபர் தரம் III பதவிக்காக 100 புதிய அதிகாரிகளுக்கு நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (05) நடைபெற்றது.
புகையிரத திணைக்கள கேட்போர் கூடத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது இலங்கை ரயில்வே துறை, தரம் III நிலைய அதிபருக்கு 100 புதிய நியமனங்களை வழங்கியுள்ளது.
புகையிரத பொது முகாமையாளர் ரவீந்திர பத்மப்பிரிய உள்ளிட்ட திணைக்கள உயர் அதிகாரிகளும், அமைச்சின் தொழிற்சங்க ஒருங்கிணைப்புச் செயலாளர் எஸ்.பி. விதானகே உள்ளிட்ட குழுவினரும் இங்கு கலந்துகொண்டனர்.





