கம்பீர் தலைமையில் 50 வருடங்களில் இல்லாத 10 மோசமான சாதனைகளை படைத்த இந்திய அணி
ஐசிசி டி20 உலகக்கோப்பை மற்றும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்த இந்திய அணி, 2024-ம் ஆண்டில் வெறும் 3 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியது.
இலங்கைக்கு எதிராக விளையாடிய 3 ஒருநாள் போட்டிகளில் முதல் போட்டி சமன் செய்யப்பட்ட நிலையில், மற்ற 2 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்தது.
இதன்மூலம் 45 ஆண்டுகளுக்குப் பிறகு 2024-ல் இந்தியா ஒரு ODI போட்டியில் கூட வெற்றி பெறவில்லை என்ற மோசமான சாதனையை படைத்தது.
2. 41 வருடத்திற்கு பின் மோசமான சாதனை..
41 வருடங்களுக்கு பிறகு இந்திய அணி ஒரே ஆண்டில் சொந்த மண்ணில் நடைபெற்ற 4 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை தழுவியது.
3. 36 வருடத்திற்கு பின் மோசமான சாதனை..
36 வருடத்திற்கு பிறகு இந்திய அணி சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவியது. இந்தியா கடைசியாக 1988 இல் நியூசிலாந்திற்கு எதிராக சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட்டில் தோல்வியடைந்தது, அந்த நேரத்தில் ஜான் ரைட் நியூசிலாந்தில் வழிநடத்தினார்.
பெங்களூருவில் நடந்த முதல் டெஸ்டில் நியூசிலாந்துக்கு எதிரான ஹோம் தோல்வி 36 ஆண்டுகளுக்கு பிறகு பதிவுசெய்யப்பட்டது.
4. 27 வருடத்திற்கு பின் மோசமான சாதனை..
2024-ல் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. கடைசியாக 1997-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான இருதரப்பு ஒருநாள் தொடரை இந்தியா இழந்திருந்தது, இந்தசூழலில் இந்த தோல்வி 27 நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்ந்தது.
5. 24 வருடத்திற்கு பின் மோசமான சாதனை..
24 வருடத்திற்கு பிறகு இந்திய அணி முதல் முறையாக சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் செய்யப்பட்டது.
6. 19 வருடத்திற்கு பின் மோசமான சாதனை..
பெங்களூரில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 19 வருடங்களுக்கு பிறகு இந்தியா தோல்வியை சந்தித்தது. இதற்கு முன்பு பாகிஸ்தானுக்கு எதிராக 2005-ம் ஆண்டில் பெங்களூரில் நடந்த டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்தித்தது.+
7. 12 வருடத்திற்கு பின் மோசமான சாதனை..
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 12 வருடங்களுக்கு பிறகு இந்தியா தோல்வியை சந்தித்தது.
8. 12 வருடத்திற்கு பின் மோசமான சாதனை..
12 வருடத்திற்கு பிறகு சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரை இழந்தது இந்திய அணி.
9. 10 வருடத்திற்கு பிறகு தோல்வி..
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரை 10 வருடத்திற்கு பின் இழந்தது இந்திய அணி. அதுமட்டுமில்லாமல் 10 வருடத்திற்கு பிறகு பார்டர் கவாஸ்கர் தொடரில் 2 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை சந்தித்தது இந்தியா.
10. 46 ரன்னில் சுருண்ட இந்தியா..
இந்தியா சொந்த மண்ணில் இதுவரை இல்லாத குறைந்த டெஸ்ட் ஸ்கோராக 46 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. ஆசியாவிலேயே எந்த அணியும் எடுத்த மிகக் குறைந்த டெஸ்ட் ஸ்கோராக இது பதிவுசெய்யப்பட்டது.