மெக்சிகோவில் டிரக் விபத்தில் 10 அகதிகள் உயிரிழப்பு..!

மெக்சிகோவில் இடம்பெற்ற டிரக் விபத்தில் 10 அகதிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. அதோடு இந்த விபத்தில் மேலும் 25 அகதிகள் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பல நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான அகதிகள் மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்குள் நுழைய முற்படுகின்றனர். அவ்வாறு அகதிகள் பயணித்த டிரக் ஒன்று கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த அகதிகள் அனைவரும் கியூபா நாட்டைச் சேர்ந்தவர்கள் என பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். அதேவேளை கடந்த வாரமும் மெக்சிகோவில் அகதிகளை ஏற்றிச் சென்ற டிரக் விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 17 times, 1 visits today)