இலங்கை

பொலிஸ் வேடமணிந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 10 பேர் கைது!

பொலிஸ் வேடமணிந்து வீடுகளுக்குள் பலவந்தமாக நுழைந்து குடியிருப்பாளர்களைத் தாக்கி சொத்துக்களைக் கொள்ளையடிக்கும் கும்பலின் மூளையாக செயற்பட்ட ஒருவர் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல்மாகாணத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஹொரண பொக்குனுவிட பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே குறித்த 10 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 10 ஆயிரம் மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், சந்தேகநபர்களிடம் இருந்து, பொலிஸ் சீருடைக்கு நிகரான உடைகள், வாள்கள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்கள், 04 மோட்டார் சைக்கிள்கள், கொள்ளையடித்த பணத்தில் வாங்கிய 2 முச்சக்கரவண்டிகள், 37 பவுன்  தங்கம் ஆகியவையும் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த நபர்கள்,12இற்கும் மேற்பட்ட கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் குறித்த 10 பேரும் நேற்று ஹொரணை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

(Visited 5 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்