இலங்கை செய்தி

யாழில் மது போதையில் குழப்பம் விளைவித்த பெண்கள் உட்பட 10 பேர் கைது

மது போதையில் குழப்பம் விளைவித்த 06 புலம்பெயர் தமிழர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுடன் இருந்த நான்கு பெண்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பியவர்கள் , வவுனியா பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா கடற்கரைக்கு சென்று நேற்று முன்தினம் பொழுதை கழித்துள்ளனர்.

அதன் போது , அவர்களில் ஒருவரின் மோதிரத்தை காணவில்லை என , கடற்கரையில் கடமையில் இருந்த உயிர்காப்பு பிரிவை சேர்ந்த பொலிஸாருடன் வாக்குவாதப்பட்டு , அவர்களுடன் முரண்பட்டுள்ளனர்.

அது தொடர்பில் பொலிஸார் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து , கடற்கரைக்கு விரைந்த பொலிஸார் 06 ஆண்களையும் 4 பெண்களையுமாக 10 பேரையும் கைது செய்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை 4 பெண்களையும் பிணையில் செல்ல அனுமதித்த நீதிமன்றம் , 06 ஆண்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் ஐந்து பேர் கனேடியன் பிரஜைகள் எனவும் , ஒருவர் லண்டன் பிரஜை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

(Visited 4 times, 1 visits today)
Avatar

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content