கனடாவில் கார்பன் மோனாக்சைடு விஷத்தால் 10 பேர் பாதிப்பு!
கனடாவின் வானியர் பகுதியில் கார்பன் மோனாக்சைடு தாக்கியதில் பத்து பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக ஒட்டாவா போலீஸ் சேவை கூறுகிறது.
ஆறு பெரியவர்கள் மற்றும் நான்கு குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாக ஒட்டாவா துணை மருத்துவர்கள் கூறுகின்றனர்.
நான்கு குழந்தைகளும் தீவிரமான நிலையில் உள்ளதுடன், மற்றுமொரு பெரியவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் நபர் ஒருவர் பொலிஸாரின் அவசர தொலைபேசியை தொடர்பு கொண்டதை தொடர்ந்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
(Visited 1 times, 1 visits today)