பாதள குழுவைச் சேர்ந்த 10 பேர் கைது
திட்டமிட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த மேலும் 10 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விசேட நடவடிக்கையின் போது, மேற்கு மற்றும் தென் மாகாணங்களை தளமாகக் கொண்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர்களை கைது செய்வதற்காக நாடு முழுவதும் 20 விசேட பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
கொட்டாஞ்சேனை, தெமட்டகொட, கெசல்வத்தை, வெல்லம்பிட்டிய, பாணந்துறை, இரத்மலானை, அம்பலாங்கொடை, மோதர மற்றும் கம்பஹா ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 19ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த விசேட நடவடிக்கையின் கீழ் 171 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த 171 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
(Visited 10 times, 1 visits today)





