ஆந்திராவில் உள்ள இந்து கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் பலி, பலர் காயம்
தென்னிந்திய மாநிலமான ஆந்திராவில் உள்ள ஒரு இந்து கோவிலில் இன்று(01) ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காயமடைந்தனர். என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகரான அமராவதியிலிருந்து(Amaravati) சுமார் 548 கி.மீ வடகிழக்கில் உள்ள ஸ்ரீகாகுளம்(Srikakulam) மாவட்டத்தில் உள்ள காசிபுக்காவில்(Kasibugga) உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் இந்த விபத்து நிகழ்ந்தது.
இந்து மதத்தின் புனித நாளான ஏகாதசியை முன்னிட்டு அங்கு ஏராளமானோர் கூடியிருந்தனர்
கோயிலில் கூட்டம் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்ததாகவும், நிர்வாகத்தால் கூட்டத்தை திறம்பட நிர்வகிக்க முடியவில்லை என்றும், இதனால் நெரிசல் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன
இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக காவல்துறையினர் அஞ்சுகின்றனர்





