வட அமெரிக்கா

அமெரிக்காவினால் அறிவிக்கப்பட்ட வரிகளுக்கு இன்னும் 10 நாட்கள்

அமெரிக்காவினால் பல உலக நாடுகள் மீது அறிவிக்கப்பட்ட வரிகள் இன்னும் 10 நாட்களில் நடப்புக்கு வரவுள்ளன.

அடுத்த மாதம் 9ஆம் திகதி வரை, 90 நாட்களுக்கு வரி அமலாக்கம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

அதை நீட்டிக்கத் திட்டமில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் கூறினார்.

அமெரிக்காவுடன் ஒப்பந்தம் எட்டப்படாத நாடுகளுக்கு வரிகள் குறித்துக் கடிதம் அனுப்பப்படும் என்றார் அவர்.

வரி தவிர்ப்பை நீட்டிக்கத் திரு டிரம்ப்பும் மூத்த அதிகாரிகளும் சென்ற வாரம் ஒப்புக்கொண்டதைப் போல் தென்பட்டது.

ஆனால் ஒவ்வொரு நாட்டுடனும் ஒப்பந்தம் செய்துகொள்வது சவால்மிக்கது என டிரம்ப் ஒப்புக்கொண்டார்.

அமெரிக்காவின் Fox ஒளிவழியில் நேற்று அளித்த நேர்காணலில் கடிதங்கள் விரைவில் அனுப்பப்படும் என டிரம்ப் கூறினார்.

(Visited 7 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்