1 தொன் போர்முனை ஏவுகணைகள் தயார் நிலையில் – ஈரானின் அதிரடி அறிவிப்பு
தங்கள் நாட்டின் ஏவுகணைத் திட்டம் அழிக்கப்பட்டுவிட்டதாக அமெரிக்கா கூறுவதை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
அதற்கு மாறாக, 1 தொன் நிறையுடைய போர்முனைகளைத் தாங்கிச் செல்லக்கூடிய சக்திவாய்ந்த ஏவுகணைகளை அதிக அளவில் தயார் நிலையில்
வைத்துள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.
இதனிடையே ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய் கப்பல் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தினால் 20 மடங்களவில் கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்படும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
இதேவேளை, மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 486 ஐ கடந்துள்ளது.
உயிரிழப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.





