இலங்கை செய்தி

1.7 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது

சுமார் 1.7 கோடி ரூபா பெறுமதியான கேரளா கஞ்சா தொகையை லொறி ஒன்றில் கடத்திச் சென்ற சாரதி ஒருவரை, இன்று (21) நண்பகல் நீர்கொழும்பு மதுவரி நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இந்தியாவிலிருந்து மீன்பிடி படகு மூலம் நீர்கொழும்பு கடற்கரைக்கு கொண்டு வரப்பட்ட இந்த கேரளா கஞ்சா பொதிகள், சிறிய லொறி ஒன்றின் மூலம் குருநாகல் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட போதே கைது  இடம்பெற்றுள்ளது.

புலனாய்வுத் தகவல் ஒன்றின் அடிப்படையில், நீர்கொழும்பு மஹா ஹுனுபிட்டிய பகுதியில் வைத்து இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது சுமார் 85 கிலோ கிராம் எடையுள்ள இந்தக் கேரளா கஞ்சா, 40 பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு, பின்னர் அவை 2 சாக்குகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டதாக மதுவரி அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த லொறியில் சாரதி மாத்திரமே இருந்துள்ளதுடன், அவர் பொலன்னறுவை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர் மற்றும் போதைப்பொருள் தொகையை இன்றைய தினம் (21) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!