பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் தினத்தை தனியாக கழிக்கும் 1.4 மில்லியன் மக்கள்!
இங்கிலாந்தில் 65 வயதுக்கு மேற்பட்ட 590,000 பேர் கிறிஸ்துமஸ் தினத்தன்று யாரையும் பார்க்கவோ பேசவோ மாட்டார்கள் என ஆய்வொன்று குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் ஏறக்குறைய 1.4 மில்லியன் மக்கள் தனியாகவே இரவு உணவை உட்கொள்வார்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஏஜ் யுகே கூறுகையில், தனிமை மற்றும் சமூக தனிமை என்பது பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக பண்டிகை காலத்தில் 10 இல் ஒருவர் தனிமையில் பொழுதை கழிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு மில்லியன் முதியவர்கள் இந்த நேரத்தில் மற்றவர்களை விட தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்கிறார்கள் என்று தொண்டு நிறுவனம் கூறுகிறது.
(Visited 1 times, 1 visits today)