ஆப்கானிஸ்தானில் தலிபான்களால் கல்வியை இழந்த 1.4 மில்லியன் மாணவிகள்..
ஆப்கானிஸ்தானை தலிபான் அமைப்பினர் 2021ஆம் ஆண்டு முதல் ஆட்சி செய்து வருகின்றனர். அப்போதிலிருந்து அங்கு பெண்கள் கல்விக்குப்பெரிய அளவில் கட்டுப்பாடுகளும் சவால்களும் உள்ளன.
கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் குறைந்தது 1.4 மில்லியன் ஆப்கானிஸ்தான் பெண்கள் உயர்நிலைக் கல்வியைப் பயில தலிபான் தடை விதித்துள்ளது.
தலிபானின் இந்த நடவடிக்கை ஒரு தலைமுறையின் எதிர்காலத்தையே சிதைப்பதாக ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் ‘யுனெஸ்கோ’ கவலைத் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தொடக்கப் பள்ளி செல்பவர்களின் எண்ணிக்கையும் சரிந்து வருகிறது. 1.1 மில்லியனுக்கும் குறைவான மாணவ மாணவிகள் மட்டுமே கல்வி கற்பதாக ‘யுனெஸ்கோ’ அதன் அறிக்கையில் குறிப்பிட்டது.
சரியான கல்வி கிடைக்காவிட்டால் மாணவர்கள் குழந்தை தொழிலாளியாக மாற வாய்ப்புள்ளது, மேலும் சிறு வயதிலேயே அவர்கள் திருமணம் செய்துகொள்ளும் சூழல் உருவாகும் என்று அமைப்பு தெரிவித்தது.
மூன்றே ஆண்டுகளில் தலிபான் அமைப்பு ஆப்கானிஸ்தானின் இருபது ஆண்டு கல்வி கட்டமைப்பை ஒழித்துவிட்டதாக யுனெஸ்கோ கூறியது.
உலகிலேயே ஆப்கானிஸ்தானில் மட்டுமே பெண்கள் உயர்நிலை பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.