1 கோடி மதிப்பீட்டில் 200 கறவை மாடுகள் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
ஹூண்டாய் மோட்டார் இந்தியா பவுண்டேஷன் சார்பில் பெண்களின் வாழ்வாதார உதவிக்கு 1கோடி மதிப்பில் 200 கறவை மாடுகள் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுகோட்டை பகுதியில் அமைந்துள்ள ஹீண்டாய் கார் தொழிற்சாலையின், சமூக பிரிவான ஹூண்டாய் மோட்டார் இந்தியா பவுண்டேஷன் லிமிடெட் சார்பில் கிராமப்புற மேம்பாடுக்களுக்காக பல்வேறு சமூக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மனித குலத்திற்கான முன்னேற்றம் எனும் நோக்குடன் செயல்பட்டு வரும் நிலையில் குறிப்பாக கிராமப்புற பெண்களின் வாழ்வாதார வாய்ப்புகளை அதிகரிக்கும் காரணிகளை கண்டறிந்த போது.
கால்நடை வளர்ப்பு மட்டுமே இவர்களை உயர்த்தும் என கண்டறியப்பட்டதின் விளைவாக முதல் கட்டமாக இருங்காட்டுகோட்டை கிராம பகுதியிலுள்ள 53 பயனாளிகளுக்கு பசுமாடு மற்றும் கன்று குட்டி வழங்கப்பட்டது.
மேலும் அவர்களுக்கு தீவன உற்பத்தி , பால் கறப்பு , மதிப்பு கூட்டு பொருள் உற்பத்தி மற்றும் கால்நடை காப்பீடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் மாதம் ரூபாய் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை வருவாய் வருவது உறுதி செய்யப்பட்டது.
அவ்வகையில் மேலும் இத்திட்டத்தை விரிவாக்கும் வகையில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் 200 குடும்ப பெண்களுக்கு கறவை மாடுகள் வழங்கப்பட்டு அதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
இதன் நிறைவு விழா இன்று களியனூரில் உள்ள ஹேண்ட் இன் ஹேண்ட் நிறுவன அலுவலக வளாகத்தில், காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் கவிதா மற்றும் ஹீண்டாய் மோட்டார் இந்தியா பவுண்டேஷன் அறக்கட்டளை அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பாக பயிற்சி எடுத்து பல்வேறு திறன்களை வெளி காட்டிய ஐந்து நபர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பேசிய பயனாளிகள் தங்களது குடும்ப வருமானத்தை அதிகரிக்க வாய்ப்பளித்த ஹீண்டாய் நிறுவனத்திற்கும் , கறவை மாடுகள் பராமரிப்பு குறித்து பயிற்சி அளித்த ஹேண்ட் இன் ஹேண்ட் நிறுவனத்திற்கும் நன்றி தெரிவித்தனர்.