இந்தோனேசியாவில் வெள்ளத்தில் மூழ்கிய 09 கிராமங்கள் : 16 பேரின் உடல்கள் மீட்பு!

இந்தோனேசிய மீட்புப் பணியாளர்கள், நாட்டின் முக்கிய தீவான ஜாவாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட மக்கள் பாறைகளுக்கு இடையில் சிக்கியுள்ளதாகவும், மண்ணில் புதையுண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பகுதியில் இருந்து 16 பேரின் உடல்களை மீட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் 09 பேர் மாயமாகியுள்ளதாக கூறப்படுகிறது.
திங்கட்கிழமை பெய்த கனமழையால், ஆறுகள் கரைகளை உடைத்து, மத்திய ஜாவா மாகாணத்தின் பெக்கலோங்கன் மாகாணத்தில் உள்ள ஒன்பது கிராமங்களை அழித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
காயமடைந்த பத்து பேர் தப்பித்து அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 14 times, 1 visits today)