சீரற்ற வானிலையால் 09 பேர் உயிரிழப்பு! 300 குடும்பங்கள் பாதிப்பு!
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 09 பேர் உயிரிழந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் இன்று அறிவித்துள்ளது.
தற்போது நிலவும் மழை காரணமாக, பல பகுதிகளில் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், சில இடங்களில் மண்சரிவு பதிவாகியுள்ளதாகவும், பேரிடர் மேலாண்மை மையத்தின் இயக்குநர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.
இதற்கிடையில், 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.
இதற்கமைய கொழும்பு, களுத்துறை, காலி, கண்டி, கேகாலை, மாத்தறை, இரத்தினபுரி, பதுளை, ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.
மேலும் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக மாத்தறை மாவட்டத்தில் 100 குடும்பங்களைச் சேர்ந்த 363 பேர் பாதிக்கப்பட்டள்ளதாக மாத்தறை மாவட்ட நிவாரண சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




