பிரித்தானியாவில் 09 கவால்துறை அதிகாரிகள் பணியிடைநீக்கம் – சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு!

பிரித்தானியாவில் 09 கவால்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சேரிங் கிராஸ் காவல் நிலையத்தில் பிபிசி நடத்திய விசாரணையைத் தொடர்ந்து குறித்த அதிகாரிகள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டு தற்போது காவல் கண்காணிப்புக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதிகப்படியான பலத்தைப் பயன்படுத்துதல், பாரபட்சமான மற்றும் பெண் வெறுப்பு கருத்துக்கள் மற்றும் பொருத்தமற்ற நடத்தையைப் புகாரளிக்கவோ அல்லது சவால் செய்யவோ தவறியது ஆகிய குற்றச்சாட்டுக்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.
பணியிடைநீக்கம் செய்யப்பட்டவர்களில் போலீஸ் கான்ஸ்டபிள் முதல் சார்ஜென்ட் வரை பதவிகளில் இருப்பதாக கூறப்படுகிறது.
ஒன்பது அதிகாரிகளை இடைநீக்கம் செய்து, மேலும் இருவரை முன்னணிப் பணிகளில் இருந்து நீக்கியுள்ளதாக மெட்ரோபாட் தெரிவித்துள்ளது.
(Visited 1 times, 1 visits today)