08பாகிஸ்தான் இராணுவத்தினரின் அதிரடி நடவடிக்கை : 08 பேர் கொலை – வெடிமருந்துகள் மீட்பு!

ஆப்கானிஸ்தானின் வடமேற்கு எல்லையில் பாகிஸ்தான் இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் ஒரே இரவில் 8 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள வடக்கு வஜிரிஸ்தானில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது தீவிரவாதிகளின் வசம் இருந்த வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.
கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் தொடர்பு உள்ளிட்ட விவரங்களை ராணுவம் தெரிவிக்கவில்லை. இத்தகைய தாக்குதல்கள் பெரும்பாலும் தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் அல்லது TTP என்றும் அழைக்கப்படும் பாகிஸ்தானிய தாலிபான்களை குறிவைத்தே மேற்கொள்ளப்படுகின்றன.
(Visited 18 times, 1 visits today)